எல்லா நோய்களுக்கும் நபி (ஸல் ) அவர்கள் கூறிய மருந்து


அஸ்ஸலாமு அலைக்கும்...(வரஹ்)

உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் சிறுநோயிலிருந்து பெருநோய் வரைக்கும் இன்று வந்து கொண்டுத்தான் இருக்கின்றது..

காரணம் நாம் சுவாசிக்கக்கூடிய காற்றில் மாசுபடுந்திருப்பதாலும் நாம் உண்ணக்கூடிய உணவு பல மருந்துகளால் வளர்க்கப்படுவதாலும் இயற்கைக்கு மாறாக இவைகள் அனைத்தும் மாறுவதாலும் மனிதர்களுடைய உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றது. .

இது இறைவனுடைய நாட்டத்தால் மனிதர்களுடைய செயலால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். இருந்தாலும் அந்த இறைவன் கருணையாளன் அல்லவா.,  அதனால் தான் நபி(ஸல்) அவர்கள், சொல்கின்றார்கள்.,

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் அனுமதியால் அந்த நோய் குணம் ஏற்படும்..இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்..
                                           முஸ்லிம் 4432

நபிகள் நாயகம் பேசிய அனைத்தும் அல்லாஹ்வால் சொல்லக்கூடிய ஒரு செய்தியாகும் என்பதும் இங்கே அல்லாஹ்வால் கொடுக்கக்கூடிய அந்த நோய்க்கு மனிதர்கள் செய்யக்கூடிய அந்த தீய செயல்களுக்காக நம் உடல் ஏற்றுக்கொள்ளாமல் நோய் ஏற்படுகின்றது.

அதற்காக அல்லாஹ் கருணையாளன் எல்லா நோய்க்கும் மருந்து இருக்கின்றது. அதை நீங்கள் சாப்பிடுங்கள் நிச்சயமாக அந்த நோய் அல்லாஹ்வின் அனுமதியால் குணமாகும் என்பது நபி(ஸல்)  அவர்கள் சொன்ன செய்தியாகும்...

இப்போது எல்லா நோய்க்கும் அதாவது மரணத்தை தவிர எல்லா நோய்க்கும் ஒரு மருந்தை நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

 எந்த நோயானாலும்  அதற்கு கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும் ;மரணத்தை தவிர ! என்று அபுஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்..
                               முஸ்லிம் 4451

கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர அனைத்து நோய்க்கும் நிவாரணம் இருக்கின்றது என்று நபி(ஸல்) சொல்லுகின்றார்கள் என்றால் இன்றைய நவீன உலகில் பல நோய்க்கு மருந்துகள் தயாரிக்க முடியாத ஒரு சூழல் நிலவிக்கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் நபிகள் நாயகம் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கருஞ்சீரகத்தில் மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்க்கும் நிவாரணம் இருக்கிறது என்று சொல்லுயிருக்கின்றார்கள். ஆக கருஞ்சீரகம் நமக்கொரு மிகப்பெரிய ஒரு மருந்து.

இதேபோன்று நபி(ஸல்) அவர்கள் தேனிற்கும் அருமருந்து இருக்கின்றது என்று நபிகள் நாயகம் சொல்லுகின்றார்கள்.

பேரித்தம்பழத்திலும் நபிகள் நாயகம் பல மருந்துகள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்...

Post a Comment

0 Comments