நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட துஆ


அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)

அல்லாஹு ரப்பிலாலமின் இந்த மனித சமூகத்திற்கு அவனோடு நெருக்கமாக இருப்பதற்காக இரண்டு விதமான செயல்களை நம்மை செய்ய சொல்லுகின்றான்.,

ஒன்று தொழுகை, இன்னொன்று அவனிடம் நாம் கேட்கக்கூடிய நம்முடைய துஆ

இதில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட துஆ என்ன என்பதை தான் இப்போது நாம் காண இருக்கிறோம்..

இன்ஷாஅல்லாஹ்

இந்த செய்தியை இந்த ஹதீஸ்ஸை கேட்டவுடன் நீங்களும் உங்களுடைய ஒவ்வொரு பிரார்த்தனையிலும் ஒவ்வொரு துஆக்களிலும் ஒவ்வொரு தொழுகையிலும் இந்த துஆவை நீங்கள் கேளுங்கள்..

நான் ஆயிஷா அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டி வந்த பிராத்தனைகள் குறித்து கேட்டேன். ஆயிஷா ரலி அவர்கள் , அதற்கு அல்லாஹ்வினுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்த பிரார்த்தனையைத்தான் அதிகமாக கேட்டார்கள் என்று சொன்னார்கள். அது என்ன என்றால்,  இறைவா நான் செய்தவற்றின் தீங்கிலுருந்தும், நான் செய்ய தவறியவற்றின் தீங்கிலுருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கேட்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் அதிகமாக இந்த துவாவை தான் தன் வாழ்நாளில் கேட்டதாக ஆயிஷா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்..
                                              முஸ்லீம்:5259

ஆக அருமையான சகோதரர்களே., அதிகம் அதிகம் நபி(ஸல்) அவர்கள் கேட்ட இந்த துவாவை நாமும் இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய நேரங்களில் பிரார்த்தனைகளில் தொழுகைகளில் கேட்டு கொள்ளுவோம்...

Post a Comment

0 Comments