அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மனிதர்களாகிய நமக்கு கஷ்டங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் நாம் அல்லாஹ்வினிடத்திலே பிராத்தனையும் செய்து கொண்டிருப்போம். அப்படிப்பட்ட கஷ்ட காலங்களில் நபி(ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான பிரார்த்தனை ஒன்றை நமக்கு கற்று தந்துருகின்றார்கள்...
அபுதாவூது அஹமத் போன்ற நபிமொழி தொகுப்பில் இந்த துஆ இடம் பெறுகின்றது...
இதனை நீங்களும் ஓதி கொள்ளுங்கள். இன்ஷாஅல்லாஹ்...
யா அல்லாஹ் ! உன் அருளையே வேண்டி ஆதரவு வைக்கின்றேன். ஆகவே கண்இமை மூடும் அளவிற்கு கூட என்னை என் மனதின்பால் ஒப்படைத்து விடாதிருப்பாயாக..!
என்னுடைய காரியம் ஒவ்வொன்றயும் எனக்கு நீ சீராக்கி லேசாக்கி வைப்பாயாக.. ! வணங்கப்படுபவன் உன்னை அன்றி வேறில்லை என்பதை நான் உறுதியாக சாட்சி கூறுகிறேன்..
நூல் அபுதாவூது 4/324
என்று நபி(ஸல்) அவர்கள் பிராத்தித்த இந்த பிரார்த்தனை..
அபுதாவூது என்கின்ற நபிமொழி தொகுப்பிலும் அஹமத் என்கின்ற நபிமொழி தொகுப்பிலும் இடம் பெறுகின்றது...
ஆகவே நீங்களும் கஷ்ட காலங்களில் இந்த பிரார்த்தனையை அதிகம் அதிகம் ஓதி கொள்ளுங்கள்..
அல்லாஹூ ரப்புலாலமின் நம்முளுடைய கஷ்டத்தை நீக்குவான் என்ற உறுதியோடு நீங்கள் அல்லாஹ்விடத்திலே கேட்டால் நிச்சயமாக உங்களுடைய துஆவை ஏற்றுக்கொண்டு உங்கள் கஷ்டங்களை நீக்குவான் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு இந்த பிரார்த்தனையை ஒவ்வொரு தொழுகையிலும் நீங்கள் கேளுங்கள். ..
இன்ஷாஅல்லாஹ் கஷ்டமில்லாத ஒரு வாழ்க்கையை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹு ரப்புலாலமின் தந்துருளுவானாக...


0 Comments