ஜும்ஆ நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜும்ஆ தினத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்னன்ன என்பதை நபி(ஸல்) அவர்கள் சொன்ன செய்தியிலிருந்து நாம் காண இருக்கிறோம்...


'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவம் அடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்'  என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்..
                                புகாரி:879

அதேபோல் திர்மிதி என்கின்ற நபிமொழி தொகுப்பில்

யார் வெள்ளிக்கிழமை அன்று தலையையும் மேனியையும் கழுவி குளித்துவிட்டு நேரத்தோடு சென்று இமாமை நெருங்கி அமர்ந்து அவர் உரை நிகழ்த்தும் போது தான் பேசி ஜும்ஆவின் பலனை கெடுத்து விடாமல் வாய் மூடி மெளனமாக செவி தாழ்த்தி கேட்டு வருகின்றாரோ, அவரின் ஒவ்வொரு எட்டுக்கும் ஒவ்வொரு நடைக்கும் ஒர் ஆண்டு பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபட்ட வழிபாட்டின் நன்மை அவர்க்கு கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்...
                               திர்மிதி: 456

ஆக இமாம் சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டிருக்கூடிய சமயத்தில் நாம் வீணான பேச்சுகளில் ஈடுபடாமல் இமாமின் சொற்பொழிவில் கவனம் செலுத்த வேண்டும்., இது ஜும்ஆவின் ஒழுக்கத்தில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.,
ஜும்ஆ  நாளில் ஒருவர் குளித்து இயன்றவரை தூய்மையாகிய பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி ஜும்ஆவிற்கு புறப்பட்டு அமர்ந்திருக்கும் இருவரை பிரிக்காமல் அவர்க்கு விதிக்கப்பட்டதை  தொழுது பிறகு இமாம் வந்தவுடன் மெளனம் காத்தால் அந்த  ஜும்ஆவிற்கும் அடுத்து வரக்கூடிய ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
                                          புகாரி: 910

இதுவும் ஒரு ஜும்ஆவில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களில் ஒன்றாகும்.

Post a Comment

0 Comments