அல்லாஹ் தடை செய்த காரியங்கள்



அல்லாஹ் தடை செய்த  காரியங்கள்:



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ் ரப்பில் ஆலமின் தன்னுடைய திருமறை குர்ஆனில் கூறுகின்றான்..

"வாருங்கள்!
உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும்(ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்,எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதிர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்;வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்-ஏனெனில் ,உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;வெளிப்படையாக இரகசியமாக மானக்கெடான காரியங்களில் நீங்கள் நெருங்காதீர்கள்;அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஒரு ஆத்மாவையும் கொலை செய்யாதீர்கள்-இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்க்காக
 (இறைவன் )உங்களுக்கு  (இவ்வாறு) போதிக்கின்றான்..அல்குரான் 6:151

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்;அளவையும் ,நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிர்ப்பமாக்குங்கள்;நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை;நீங்கள் பேசும் பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள் ;அல்லாஹ்வுக்கு நீங்கள் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள் .நீங்கள் நினைவு கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு போதிக்கிறான்.. அல்குர்ஆன்  6:152

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும் ;ஆகவே இதனையே பின்பற்றுங்கள் இதற வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.-அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்;நீங்கள் நேர் வழியை பின்பற்றி பயப்பக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.. அல்குர்ஆன் 6:153

மனிதர்களே ! இதுவும் வேதமாகும் ; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் இது மிக்க பாக்கியம் வாய்ந்தது ;ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் இன்னும் அவனை அஞ்சி பாவத்தை விட்டு விலகிக் கொள்ளுங்கள் நீங்கள் இறைவனால் கிருபை செய்யப்படுவீர்கள்..
என்று அல்லாஹ் கூறிப்பிடுகின்றான்.. அல்குர்ஆன் 6:155

Post a Comment

0 Comments