தொழுகையை கவனம் இல்லாமல் தொழுதால்?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தொழுகை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த மனித சமூகத்திற்கு கற்றுக்கொடுத்திறுக்கிறார்களோ அதன் அடிப்படையில் தொழ வேண்டும்..
என்னை எவ்வாறு தொழக்
கண்டிர்களோ அவ்வாறே நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி நபி மொழி தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில் நாம் தொழுகையில் ஒரு சில தவறுகள் செய்தோமையானால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதை தான் நாம் இப்போது பார்க்க இருக்கின்றோம்..
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஆக நாம் கவனம் இல்லாமல் தொழுதால் அல்லாஹ் அதற்கும் விடை கொடுக்கின்றான்.. நம்முடைய தொழுகை ஈமானோடும் இறை அச்சதோடும் இருக்க வேண்டும் என்பதையும் ,கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்கு விளக்கம் தருகிறது, ஆகேயால் தொழுகையில் கவனம் இல்லாமல் ஒரு சில தவறுகள் நமக்கு தெரிந்தது என்றால், மீண்டும் அதே தொழுகையை தொழ வேண்டும் என்பது தான் இங்கே
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார்.(தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார்.
'நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. புகாரி: 757.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்க கூடிய செய்தியிலிருந்து நமக்கு தெரிகிறது..ஆக கவனமோடு நாம் தொழுது கொள்ளுவோம்.சில நேரங்களில் தொழுகையில் தவறுகள் செய்தோமயானால் அதை திறுத்திக் கொண்டு மிண்டும் சரியாக தொழுது கொள்ளுவோம்..இறை அச்சமே இறுதிவரையில் நமக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்..


0 Comments