தாய் பாலின் முக்கியத்துவமும் குழந்தைகள் நோயில்லாமல் வளர


நம்முடைய உடல் ஆரோக்கியம் நம்முடைய குழந்தைகளுடைய ஆரோக்கியம் என இப்படியாக உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் அதிகம் செலவு செய்து வருகிறோம்..

இப்போது நாம் பார்க்க இருப்பது குழந்தைகளுக்கான ஆரோக்கியம்..


அல்லாஹ் ரப்புல் ஆலமின் திருமறை குர்ஆனில் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறான் என்றுதான் இதில் பார்க்க இருக்கிறோம்..

அல்லாஹ் ரப்புல் ஆலமின் சொன்ன இந்த ஆரோக்கியம்  இன்றைய நவீன விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும் பார்க்க இருக்கிறோம்..

மனிதனுக்கு அவனது  பெற்றோரைக் குறித்து வழியிருத்தியுள்ளோம்.அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவினப்பட்டவளாக சுமந்தால் அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்..அல்குர்ஆன்(31:14)

என்று தாய்பாலை கூறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமின் கூறுகின்றான்

அது போல் இன்னொரு அத்தியாயம்

தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் அல்குர்ஆன் (2:233)
என்று அல்லாஹ் ரப்புல் ஆலமின் இங்கு பேசுகின்றான்.

அல்லாஹ் கூறிப்பிட்டு ஒரு செய்தியை சொல்கிறான் என்றால்  அது நமக்கு கடமையாகிவிடும்..

அப்படியாக தாய்மார்களுக்கு தன்னுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் தாய் பால் உட்ட வேண்டும் அல்லாஹ் இங்கு வழியிருத்தி பேசுகின்றான்..

மருத்துவ ஆராய்ச்சி:


இப்போது நவீன விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்  பால் அருந்தும் குழந்தைகளுக்கும் , பால் அருந்தாத குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் என்ன நோய்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்து வெளியுட்டுயிருக்கிறார்கள்..

தாய் பால் அருந்தும் குழந்தைகளுக்கு எழும்பு தேய்மான நோய் வராது அது காக்கும் என்றும் , தாய்பால் உண்ணும் குழந்தைகளின் புத்தி கூர்மை தாய்பால் உண்ணாத குழந்தைகளின் புத்தி கூர்மையை விட 8 மடங்கு அதிகமாகும் என்றும் , நோய் எதிர்பு சக்தியை உருவாக்கும் என்றும் ,குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்..

அதே போல் தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராது என்றும் கூறுகிறார்கள்..

1995-யின் ஆய்வு:


1995 -யில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி தாய்பால் உட்டும் குழந்தைகளை விட செயற்கை உணவு அளிக்கப்படும் குழந்தைகளிடமே தொற்றுநோய் , வயிற்றுப்போக்கு வருவதற்கான வாய்புகள் உள்ளன என ஒரு ஆய்வு வெளிப்படையாக சொல்கிறது..

அன்பார்ந்த தாய்மார்களே தங்களுடைய அழகு போய்விடும் என்பதற்க்காக உங்களுக்கு நீங்களே நோய்களை வர வைத்து விடாதீர்கள் ,உங்களுடைய குழந்தைகளுக்கும் நோய்களை வர வைத்து விடாதீர்கள்..ஆகவே அதிகம் அதிகம் தாய்பால் கொடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அது உடல் ஆரோக்கியத்திற்கு  வழிவகை செய்கிறது...

Post a Comment

0 Comments