ஜமாத் தொழுகை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி


அருமையான சகோதரர்களே..
ஜமாத்தோடு நாம் தொழுதமேயானால் ஒரு சில செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த செயல் செய்தால் சகோதரத்துவம் நமக்கு நிச்சயம் இருக்கும் என்பதையும், இங்கே கவனத்தில் கொண்டு இப்போழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகளை பார்க்கலாம்..

 உங்கள் தொழுகை வரிசைகளை ஒழுங்கு படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதின் ஒரு அங்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. நூல்: முஸ்லிம்:741

அதே போல்

அபூமஸ்ஊத் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் எங்களுடைய தோள்களை தடவி அவை சமமாக இருக்கின்றனவாஎன்று சரிபாப்பார்கள்மேலும், நேராக நில்லுங்கள்முன்பின்னாக வேறுப்பட்டு நிற்காதீர்கள். அப்படி வேறுப்பட்டு நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுப்பட்டுவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சொன்னார்கள்..
                                    நூல் :முஸ்லிம் :739

ஆக, தொழுக கூடிய நேரத்தில், ஜமாத்தோடு தொழுக கூடிய அந்த நேரத்தில் நம் நம் வரிசைகளை ஒழுங்காகவும் நேராகவும் ஆக்கி கொள்ள வேண்டும். முன்னும் பின்னுமாக நிற்ககூடாது என்பது இங்கே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவம் வளர்வதற்கு ஒரு செய்தியாக இங்கே சொல்லுகின்றார்கள்.

உங்கள் தொழுகை வரிசைகளை ஒழுங்கு படுத்தி கொள்ளுங்கள்.இல்லையென்றால் அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை பிளவை ஏற்படுத்தி விடுவான்..
நூல் :முஸ்லிம் 744

என நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

ஆகவே இது ராணுவ கட்டுக்கோப்பு ராணுவ அணிவகுப்பு தொழுகை என்பதை புரிந்து கொண்டு அது சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என புரிந்து கொண்டு  நம் தொழுகைகளை நேராகவும் நேருக்கமாகவும் ஜமாத்தோடு தொழுக கூடிய அந்த நேரத்தில் இதை பயன்படுத்தி கொள்வோம்...
இன்ஷா அல்லாஹ்..

Post a Comment

0 Comments